கரிசல்

இருப்புச்சாமான்களுடைய ஆன்மாவுள் வாழும் கேம்ப்ரிட்ஜ் சீமாட்டிகள்
இருப்புச்சாமான்களுடைய ஆன்மாவுள் வாழும் கேம்ப்ரிட்ஜ் சீமாட்டிகள்

-ஈ.ஈ.கம்மிங்ஸ்

இருப்புச்சாமான்களுடைய ஆன்மாவுள் வாழும் கேம்ப்ரிட்ஜ் சீமாட்டிகள்

அழகிலிகள் வசதியான மனங்கொண்டவர்கள்

(மேலும், தேவாலயத்தின் ப்ரோட்டஸ்டண்ட் ஆசிகளுடன்

வாசனையற்ற வடிவமற்ற விருப்புடன் குமாரத்திகள்)

கிறிஸ்துவையும் லாங்ஃபெல்லோவையும் நம்புகிறார்கள், செத்தவர்கள் இருவரும்,

தான்தோன்றித்தனமான ஆர்வங்கள் பல்வேறு விஷயங்களில்-

எழுதும் தற் போதும் இன்னும் தெரியவருகிறது

பெருமகிழ்ச்சியடைந்த விரல்கள் பின்னுவதை காக அதற் வா போலந்தவருக்கு?

இருக்கலாம். நிரந்தர முகங்கள் தயக்க இழைப்புத்தொடுப்புப்

புரளி திருமதி. ந மற்றும் பேராசிரியர் ட இடையில் என்றிருக்கை யில்

….கேம்ப்ரிட்ஜ் சீமாட்டிகள் கண்டுகொள்வதில்லை,

கேம்ப்ரிட்ஜுக்கு

மேலே

தனது ஆகாய லாவண்டர் மூலையற்ற பெட்டியில்

சிலசமயம் உலுக்கிலுக்கிறது

நிலவு

கோபமுற்ற ஒரு மிட்டாய்த்துண்டம் போல்.

அசல்: the Cambridge ladies who live in furnished souls

தமிழில்: சன்னாசி

ஷோபா
<object width="425" height="344">

<param name="movie" value="http://www.youtube.com/v/jS0qNXEjlH0&hl=en_US&fs=1&"></param>
<param name="allowFullScreen" value="true"></param>
<param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/jS0qNXEjlH0&hl=en_US&fs=1&" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>

Dupe Lobs: Good riddance
புகைப்படம்: கெட்டி

சவாரி
சவாரி

-சன்னாசி

தாளெழுத்தம் கைக்கசக்கம்

பெயர்நெறிச்சம் சப்தநொறுக்கம்

சுவருரசம் கையிழுக்கம்

அருகம் கீழம்

கரும்புவிரல் துண்டச்சக்கை

பிரித்தடுக்கம் கிடத்தம்

கழற்றம்

உதிரம்

இழுக்கம் சுவருரசத்தாண்டப்பொழிச்சம்

தாரையம் தாரையம் அகலம்

மேகநொறுக்கம்

The Savage Detectives
இத்தாலோ கால்வினோவின் If on a winter’s night a traveler புத்தகத் தலைப்பில் ஒரு கமா விட்டுப் போயிருக்கும். படிக்கும்போது அல்லது கேள்விப்படும்போது If on a winter’s night, a traveler என்ற தலைப்பாக ‘நினைக்கத்’ தோன்றும். தமிழில் இந்த நாவல் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது - நாவலின் தலைப்பை சரியாக மொழிபெயர்க்க முயன்று பார்க்கிறேன், முடியவில்லை! துண்டிக்கப்பட்ட தலைப்பு அது - குளிர்கால இரவொன்றில் பயணி என்று தொடங்கி, ‘இறந்திருந்தால்’ ‘பிழைத்திருந்தால்’ ‘ரயிலில் மறுபடி ஏறிப் போயிருந்தால்’ ‘சூட்கேஸை மாற்றியிருந்தால்’ என்று எத்தனையோ ‘ஆல்’ களால் ‘முடித்திருக்கலாம்’ எனினும், அதுதான் துண்டிப்பின் நோக்கமா, if என்பது அசலில் இதுதானா என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகலாம். பொலான்யோவின் Savage Detectives படித்தபோது தொடர்ந்து கால்வினோவின் இப் புத்தகமும் நினைவுக்கு வந்துகொண்டிருந்தது. If on a winter’s night a traveler புத்தகத்தின் தொடக்கப் பக்கத்தில் ‘எழுத்தாளனுக்கும்’ ‘வாசகனுக்கும்’ இடையிலான உரையாடலில், புத்தகக் கடைக்குள் நடந்து சென்று கால்வினோவின் அந்த நாவலை வாங்கக் கூடிய ஒருவன் குறித்த விவரணையில், ‘படிக்கக்கூடாததற்காக எழுதப்பட்ட புத்தகங்களைக் கடந்து செல்வது’ குறித்து எழுதப்பட்டிருக்கும். தனக்குக் கிடைக்கும் புத்தகங்களுடன் தான் படிக்கக்கூடாத, இன்னும் எழுதப்படாத புத்தகங்களைக் குறித்தும் சிந்தனை செய்யும் வாசகனின் கையில் கிடைக்கும் ‘எழுதப்பட்ட புத்தகம்’ என்னவாக வாசிக்கப்படக்கூடும்? சாமானிய சம்பவங்களைத் திருகும் பல சம்பவங்கள் கால்வினோவின் கதைகளில் வரும் - அவரது ஒரு சிறுகதையில் ஒரு கேக் கடைக்குள் போகும் திருடர்கள் திருடுவதை விட்டுவிட்டு அங்கிருக்கும் கேக்குகளை தின்னத் தொடங்குவது ஒரு கட்டத்துக்குப்பின் விபரீதமாகப் படுவது, அவரது காஸ்மிகோமிக்ஸ் தொகுதியின் ஒரு கதையில் சந்திரனுக்கு ஏணி போட்டு ஏறி அதில் பால் கறப்பது போல. Traveler நாவலில் மதுக்கடையில் அமர்ந்திருக்கும் ஒருவன் (வழியான எழுத்தாளன்) அங்கு வந்திருக்கும் உள்ளூர்ப் பெண்ணை உள்ளூரார் பார்க்கக்கூடிய பிம்பமூட்டம் வழி தானும் பார்க்க நேர்வது குறித்து எழுதப்பட்டிருக்கும் - அவர்கள் கட்டவிழ்த்துவிடும் பிம்பமூட்டத்தின் கூறுகள் எவையெவையென்று தெரிந்திருக்கவேண்டிய அவசியம் கூட இல்லை அதற்கு. அந்த நாவலில் குறிப்பிடப்படும் ‘பயணி’ அதற்கு உள்ளோ வெளியோ இருக்கும் வாசகன், எழுத்தாளன், ‘பாத்திரங்களாகக் கருதப்படும்’ வஸ்துக்கள். ‘தன்னிலை’க் கதைசொல்லல் வழி ஒரு புத்தகத்தை அணுகுகையில் புத்தகத்துக்கு வெளியிலிருப்பவர்கள் முன் விரியும் பனிமூட்டமாக அப் புத்தகத்தை உணர்த்த முயல்வது. ஆசிரியனின் தொடர்ந்த இடையூறை வேண்டுமென்றே ஒரு உத்தியாக உள்ளே செருகுவது, இது அனைத்தும் - எழுதப்படாத புத்தகங்கள், படிக்கக்கூடாததற்காக எழுதப்பட்ட புத்தகங்கள் - இது அனைத்தும் மேம்போக்கான, ‘நமக்குத் தெரிந்ததை வேறு வார்த்தைகளில் மறுவிரிவுரையாக்கஞ்செய்யும்’ சமாச்சாரங்களாகத் தோன்றலாம். புனைவெழுத்தாளருமான - அடிப்படையில் புனைவெழுத்தாளரான கால்வினோ, ‘எழுத்தின் இயந்திரத்தன்மையை’ பல தருணங்களில் குறிப்பிட்டிருப்பார் - சிருஷ்டிக்கப்பட்ட நோக்கத்தை கொடுக்கப்பட்ட சிறு கட்டளைகள் மூலம் நேர்த்தியாக நிறைவேற்றும் எந்திரங்கள் போன்றதொரு இயக்கமே தற்போக்கில் கண்டடைந்த வழியொன்றின் கட்டளைகள் வழி ‘எழுதும்’ எழுத்தாளத்தன்மையும், இதிலே இந்த ‘மேலேயிருந்து சாமி இறங்கும்’ எழுத்தாள அழகியல், கடந்ததொரு காலகட்டத்துக்கான புரிதல் முறை தவிர வேறேதுமில்லை என்றும் கூறியிருப்பார். அவரது கட்டுரையான Cybernetics and ghostsல் இதைக் கீழ்க்கண்டவாறு எழுதியிருக்கிறார்.

Various aesthetic theories maintained that poetry was a matter of inspiration descending from I know not what lofty place, or welling up from I know not what great depths, or else pure intuition, or an otherwise not identified moment in the life of the spirit, or the Voice of the Times with which the Spirit of the World chooses to speak to the poet, or a reflection of social structures that by means of an unknown optical phenomenon is projected on the page, or a direct grasp on the psychology of the depths that enables us to ladle out images of the unconscious, both individual and collective; or at any rate something intuitive, immediate, authentic, and all-embracing that springs up who knows how, something equivalent and homologous to something else, and symbolic of it. But in these theories there always remained a void that non one knew how to fill, a zone of darkness between cause and effect: how does one arrive at the written page? BY what route is the soul or history or society or the subconscious transformed into a series of black lines on a white page? Even the most outstanding theories of aesthetics were silent on this point. I felt like someone who, due to some misunderstanding, finds himself among people who are discussing business that is no business of his. Literature as I knew it was a constant series of attempts to make one word stay put after another by following certain definite rules; or, more often, rules that were neither definite nor definable, but that might be extracted from a series of examples, or rules made up for the occasion-that is to say, derived from the rules followed by other writers. And in these operations the person “1″, whether explicit or implicit, splits into a number of different figures: into an “I” who looks over the shoulder of the “I” who is written. The “I” of the author is dissolved in the writing. The so-called personality of the writer exists within the very act of writing: it is the product and the instrument of the writing process. A writing machine that has been fed an instruction appropriate to the case could also devise an exact and unmistable “personality” with each work it composes. Writers, as they have always been up to now, are already writing machines; or at least they are when things are going well. What Romantic terminology called genius or talent or inspiration or intuition is nothing other than finding the right road empirically, following one’s nose, taking short cuts, whereas the machine would follow a systematic and conscientious route while being extremely rapid and multiple at the same time. Once we have dismantled and reassembled the process of literary composition, the decisive moment of literary life will be that of reading.

The Savage Detectives புத்தகத்துள், மெக்ஸிகோவில் ஒரு சிறு கவிஞர்கள் குழு. Visceral realists என்று பெயர் - தமிழில் கிட்டத்தட்ட ‘பொங்கிவழி யதார்த்தவாதிகள்’ என்று மொழிபெயர்க்கலாம் என்று நினைக்கிறேன். உயிரியல் ரீதியில் viscera என்பது உள்ளுறுப்புகளைக் குறிப்பது - மூளை பெரும்பாலும் இந்த viscera பற்றுப்பட்டியலில் ஏறாத உறுப்பு. மேற்கத்திய இலக்கியத்தில் வெகு அப்பாலற்ற சமீபகாலம் வரை - ஹூலியோ கொர்த்தாஸரின் ‘பாண்டியாட்டம்’ (Hopscotch) வரை - கூட மண்ணீரல் (spleen) கூட ஒரு முக்கியமான உறுப்பாக இருந்தது என்பதையும் இங்கே நினைவுபடுத்திக்கொள்ளலாம், குறிப்பாக பெரும் ‘எழுச்சி’ நிகழும் நேரங்களில் மண்ணீரல் துணைக்கழைக்கப்படும் - எனது மண்ணீரல் துடித்தது என. ஆக, இந்த மெக்ஸிக இலக்கியக் குழு இந்த பொங்கிவழி யதார்த்தம் குறித்த ஒரு அறிக்கை தயாரித்து வினியோகித்துவிட்டு அவ்வப்போது கூட்டங்கள், மதுக்கூடங்களில், நண்பர்கள் வீடுகளில் இலக்கியம் பேசுகிறது, சிறு பத்திரிகைகள் தயாரிக்கிறது, அதில் கவிதை ‘பதிப்பித்தவர்கள்’ கவிஞர்கள். ஆக, இந்த ஒன்றிரண்டு கவிதை எழுதுதல் - அடுத்த கட்டமாக மையநீரோட்ட இலக்கியவாதிகளைச் சந்தித்துப் பேசுதல் - சிறு, குறு, வழரும் இலக்கியவாதி அறிமுகம் - ஒன்றிரண்டு சொம்புகள் தயாரிப்பு/தூக்கல் - புத்தகம்/முன்னுரை - அவ்வப்போது எதிர் முகாம் எழுத்தாளர்களின் சிரசுகளைக் கொய்து பைக்குள் போட்டுக் கொள்தல், கொய்த தலைகளை ஒரு கட்டையில் சொருகி தத்தமது இலக்கிய வாழ்வுகளின் வரவேற்பறைகளில் மாட்டிவைத்தல் என்று தாதாக்கள் பாணியில் street cred ஏற்றிக்கொள்ளும் வழக்கமான இலக்கிய/எந்தவொரு போட்டிமிகுந்த தொழிலின் அடிப்படைக்கு இம்மியும் பிசகாமல் அதே அடைப்படலகை வழி இயங்கும் கவிஞர்கள். நாவலுக்குள் இந்த ‘இயக்கத்தைத்’ தொடங்கியவர்கள் ஆர்த்துரோ பெலானோ (Arturo Belano), உலிஸிஸ் லிமா (Ulises Lima) என்ற இரண்டு ந(ண்)பர்கள் - நிஜ வாழ்வில் infrarealism என்ற கவிதை ‘இயக்கத்தைத்’ துவங்கிய ரொபர்ட்டோ பொலான்யோ மற்றும் அவரது நண்பரின் இலக்கியப் ‘பிரதி’கள். என்ன ஒரு வித்தியாசம், கதைக்குள்ளிருக்கும் பெலானோ, தனது கவிதைத்தொகுதியின் டங்குவாரை ஒரு விமர்சகர் அறுக்கப்போகிறார் என்று தெரிந்தவுடனேயே அவரைத் தொடர்பு கொண்டு, ஒற்றைக்கு ஒற்றை வாள் சண்டைக்கு அழைக்கிறார் - தத்தமது நண்பர்கள், துணைகளுடன் ஒரு கடற்கரையில் விமர்சகரும் கவிஞர் பெலானோவும் சில மணித்துளிகளுக்கு வாள் சண்டை போடுகிறார்கள். பெலானோ, அவரது நண்பர் உலிஸிஸ் லிமா, கதைசொல்லிகளில் ஒருவனான வளரும் இளைய கவிஞர் (அல்லது வளர முயலும் ஒரு clueless commensal)  ஹுவான் கார்சீயா மதேரோ (Juan Garcia Madero), அவனது காதலியும் தொழில்முறை வேசியுமான லூப்பெ (Lupe) நால்வரும் செஸேரியா டினஹேரோ (Cesarea Tinajero) என்ற, யாருக்கும் தெரிந்திராத ஒரு கவிதாயினியை தேடுகிறார்கள். செஸேரியா எழுதியுள்ளது ஒரே ஒரு கவிதை - அதிலும் எழுத்து வடிவங்கள் இல்லை, வடிவங்கள் மட்டுமே. ஒரு அலை (அதாவது, வளைவுகள் கொண்ட ஒரு நேர் கோடு), ஒரு முக்கோணம் (அதாவது, இரண்டு முறை மடிக்கப்பட்ட ஒரு நேர் கோடு) போன்றவை மட்டுமே. புத்தகம் முழுக்க இந்தக் கவிஞரைத் தேடுகிறார்கள். இறுதியில் மெக்ஸிகோவின் கிராமப்புறப் பிரதேசங்களில் டினஹேரோ ஆசிரியையாக இருந்தாள் என்பது வரை கண்டறிந்து, அவளைத் தெரிந்தவர்கள் மூலம் இறுதியில் அவளைக் கண்டுபிடிக்கிறார்கள்.

Finding Cesarea wasn’t hard. We asked about her and were sent to the washing troughs, on the east side of town. The troughs are made of stone and they’re set in such a way that the water flows from the height of the first one and runs down a little wooden channel, enough for ten women’s washing. When we arrived there were only three washerwomen there. Cesarea was in the middle and we recognized her right away. Seen from behind, leaning over the trough, there was nothing poetic about her. She looked like a rock or an elephant. Her rear end was enormous and it moved to the rhythm set by her arms, two oak trunks, as she rinsed the clothes and wrung them out. Her hair was long, it fell all the way to her waist. She was barefoot. When we called her she turned around calmly and faced us. The other two washerwomen turned around too. For an instant Cesarea and her companions watched us without saying anything: the one to her right was probabbly about thirty, but she could just as easily have been forty or fifty. The one to her left couldn’t have been more than twenty. Cesarea’s eyes were black and they seemed to absorb all the sun in the lyard. I looked at Lima, who had stopped smiling. Belano blinked as if he had a grain of sand in his eye. At some point, exactly when I can’t say, we started to walk to Cesarea Tinajero’s house. I remember that as we headed down little streets under the relentless sun, Belano attempted an explanation, or several explanations. I remember his silence after that. Then I know that someone led me into a dark, cool room and that I thrrew myself down on a mattress and slept. When I woke up, Lupe was beside me, asleep, her arms and legs twined around my body. It took me a while to realize where I was. I heard voices and got up. In the next room Cesarea and my friends were talking. WHen I came in no one looked at me. I remember that I sat on the floor and lit a cigarette. Bunches of herbs tied with sisal hung on the walls of the room. Belano and Lima were smoking, but what I smelled wasn’t tobacco.

Cesarea was sitting near the only window and every so often she would look out, up at the sky, and then I don’t know why, but I could have cried too, althrough I didn’t. We were there for a long time. At some moment LUpe came into the room and sat down beside me without saying anything. Later the five of us got up and went out into the yellow, almost white street. It must have been near dusk, althrough the heat still came in waves. We walked to where we had left the car. Along the way we saw only two people: an old man carrying a transistor radio in one hand and a ten-year old boy who was smoking. It was blazing hot inside the Impala. Belano and Lima got in front. I was sandwiched between Lupe and the immense humanity of Cesarea Tinajero. Then the car crept complaining along the dirt streets of Villaviciosa until we reached the road.

We were outside of town when we saw a carcoming from the opposite direction. We were probably the only two cars for miles around. For a second I thought we were going to collide, but Lima pulled over to one side and braked. A dust cloud settled around out prematurely aged Impala. Someone swore. It might have been Cesarea. I felt Lupe’s body pressing against mine. When the dust cloud vanished, Alberto and the cop had gotten out of the other car and were aiming their guns at us.

I felt sick: I couldn’t hear what they were saying, but I saw their mouths move and I guessed that they were ordering us to get out. They’re insulting us, I head Belano say incredulously. Sons of bitches, said Lima.

ஆல்பர்ட்டோ, லூப்பெயின் மாமா. தன்னுடன் எப்போதும் வைத்திருக்கும் கத்தியால் தனது குறியின் நீளத்தை அளந்து பார்த்துக்கொள்ளும் ஆசாமி. லூப்பெயை தொழிலை விட்டு இந்தக் கும்பல் கிளப்பிக்கொண்டு வந்துவிட்டதென்று அவர்களைத் துரத்திக் கண்டுபிடிக்கும் ஆல்பர்ட்டோ மற்றும் அவனது போலீஸ் நண்பனுடனான துப்பாக்கிச்சூட்டின்போது செஸேரியா காரை விட்டு வெளியேறி தனது பெருத்த உடலுடன் அவர்களிலொருவன் மேல் பாய்ந்து விழுந்து நசுக்கி, குண்டடிபட்டுச் சாகிறாள், பெலானோவும் லிமாவும் ஒரு திசையிலும் மதேரோவும் லூப்பெயும் வேறொரு திசையிலும் பிரிகிறார்கள்.

இது, ஒரு வகையிலான கதைச் சுருக்கம். இதைப் படித்துவிட்டு தாராளமாக இந்தப் புத்தகத்தை முதலிலிருந்து கடைசிவரை படிக்கலாம். தொடர்ந்து பொலான்யோவின் புத்தகங்களை வாசித்து வருகிறேன். மேலே சொன்ன சுருக்கத்துக்கு உள்ளே இருக்கும் கிட்டத்தட்ட 650 பக்கங்களில் கிட்டத்தட்ட நூறு நூற்றைம்பது பாத்திரங்கள். இவை அனைத்தும் ஒன்றுக்குள்ளொன்று பொருந்தவேண்டும், பாத்திரங்களுக்கு புத்தகத்துள்ளே இணைகள் இருக்கவேண்டும், இணைகளில்லாப் பாத்திரம் என்ற துருத்தல் இருக்கவேண்டும் போன்ற நோக்கங்கள் எதுவுமின்றி எழுதப்பட்டவையாகத் தோற்றமளிக்க முயல்பவை இந்தப் புத்தகமும், இதன்பின் எழுதப்பட்ட 2666 ம். பொதுவாக மையச் சரடு என்ற கதியில் ஏதோவொன்று இருக்கும், இதிலும்கூட பெரும்பாலும் பெலானோ மற்றும் உலிஸிஸ் பாத்திரங்களின் வழி கதை சொல்லப்பட்டாலும், கதைசொல்லல் முறையை இப்படி அமைத்திருக்கிறார். நேரடியாகத் தன்னிலையில் எழுதுவதை (பெலானோ: நான் பார்த்தேன்) விட்டுவிட்டு, இந்தத் தன்னிலையை எதிர்கொள்ளும் அல்லது அதற்கருகிலிருக்கும் நபர் இத் தன்னிலையை விவரிப்பதாகச் செல்கின்றன (பெலானோவுடன் இருந்தவர்: நான் பார்த்தேன்). பொலான்யோவின் (பெலானோவின்) தன்னிலை கூறவேண்டியதை அத் தன்னிலையை எதிர்கொள்ளும் அல்லது அத் தன்னிலைச் சந்தர்ப்பத்துக்கு அருகாமையிலிருந்த பல்வேறு பாத்திரங்கள் அத் தன்னிலைப் பார்வையைத் தங்களதாகக் கூறுகின்றன. இந்த உத்தி, உறவுகளை எதிர்கொள்ளும் பாத்திரங்கள் வழி மட்டுமன்றி, யாக்கப்போ உரெந்தோ (Jacopo Urendo) என்ற தென்னமெரிக்கப் புகைப்படக்காரர், சட்ட வரைமுறைகள் ஏதுமற்ற, ஆயுதபாணிகளும் கொலைகளும் சர்வசாதாரணமான ஆஃப்ரிக்காவில் விட்டு விட்டுப் பல சந்தர்ப்பங்களில் பெலானோவைச் சந்திப்பதைக் கூறுவதில், நிஜ வாழ்வின் கணக்கற்ற அசல் மற்றும் கழிவிரக்க உறவுகளைச் (pity fucks) சொல்வதில், நார்மன் போல்ஸ்மேன் என்ற மெக்ஸிக யூதன் இஸ்ரேலில் தனது வீட்டில் தங்கியிருக்கும் உலிஸிஸ் லிமாவின் ஊமைக் காதலின் (காதலிக்கப்படுவது அதே வீட்டில் தங்கியிருக்கும் போல்ஸ்மேனின் காதலி க்ளௌடியா) அசௌகரியத்தை விவரிப்பதில் என்று பல தருணங்களில் அபாரமாகச் செயல்படுகிறது. இப்படி:

Pablo del Valle, Feria del Libro, Madrid, July 1994. I’m going to tell you something about the honor of poets. There was a time when I didn’t have money or the name I have now: I was out of work and my name was Pedro Garcia Fernandez. But I was talented and I was friendly. I met a woman. I met many women, but I met one woman especially. This woman, best left unnamed, fell in love with me. She worked for the post office. She was a postal official, I would say when my friends asked me what my girlfriend did. But it was really a euphemism so I wouldn’t have to say that she was a mailwoman. We lived together for a while. My girlfriend left for work in the morning and didn’t come home until five. I would get up when I heard the soft noise the door made as it closed (she was considerate of my sleep) and start to write. I worte about lofty things. Gardens, lost castles, that kind of thing. Then, when I got tired, I would read. Pio Baroja, Unamuno, Antonio and Manuel Machado, Azorin. At lunchtime I would go out, to a restaurant where they knew me. In the afternoon, I revised. When she got back from work we would talk for a while, but when did a man of letters and a mailwoman have to say to each other? I would talk about what I’d written, what I was planning to write: a commentary on Manuel Machado, a poem on the HOly Spirit, an essay taking its first sentence from Unamuno: Spain  hurts me too. She would talk about the strets she’d been on and the letters she’d delivered. She talked about stamps, some of them very rate, and the faces she’d seen in her long morning carrying letters.Then, when I couldn’t take it anymore, I would say goodbye and head out to hit the bars of Madrid. SOmetiems I would go to book parties, more for the free drinks and hors d’ouvres than anything else. I would go to the Casa de America and listen to the smug Latin American writers. I would go to the Ateneo and listen to the contented Spanish writers. Later I would meet up with friends and we would talk about our work or go together to visit the maestro. But over the literarty chatter I kept hearing the sound of my girlfriend’s sensible shoes as she quietly made her rounds, toting her yellow bag or pulling her yellow cart after her, depending on how much mail she had to deliver that day, and then I’d lose my concentration, and my tongue, which seconds before had been sharp and clever, would turn clumsy, and I’d fall into a sullen, helpless silence that the others, including our maestro, would luckily take as evidence of my pensive, introspective, philosophical nature. Sometiems, on my way home late at night, I would stop in the neighborhood where she worked and retrace her route, I’d mimic her, I’d ape her, marching with a step that was at once soldierly and ghostly. In the end I’d find myself throwing up, in tears, leaning against a tree, asking myself how I could possibly live with a woman like her. I never came up with any answers, at least the ones I came up with never felt true, but in fact I didn’t leave her. We lived together for a long time. Sometimes, whenI took a break from my writing, I’d console myself that it would be worse if she were a butcher. I would have been happier if she were a policewoman, mostly because it wouldn’ve been more fashionable. A policewoman was better than a mailwoman. Then I’d keep writing and writing, in a rage or near collapse, and little by little I mastered the rudiments of the trade. And so the years went by and the entire time I lived off my girlfriend. Finally I won the New Voices of the Council of Madrid Prize and overnight I found myself in the possession of three million pesetas and an offer to work for one of the capital’s most distinguished papers. Hernando Farcia Leon worte a rave review of my book. THe first and second printings sold out in less than three months. I’ve been on two television shows, even though I think one of them brought me on to make fun of me. I’m writing my second novel. And I left my girlfriend. I told her we weren’t right for each other and that I didn’t want to hurt her and that I wished her the best and that she knew she could always count on me if she ever needed anything. Then I packed my boks in cardboard boxes, I put my clothes in a suitcase, and I left. I can’t remember which great writer said it, but love smiles on a winner. It wasn’t long before I was living with another woman and renting an apartment in Lavapies, an apartment that I pay for myself, where I’m happy and productive. My current girlfriend is stydying English literature and writes poetry. We spend a lot of time talking about books. And sometimes she has great ideas. I think we make a wonderful couple: people look at us and nod their heads. We embody optimism and the future in a certain way, a way that’s pragmatic and thoughtful too. Some nights, though, when I’m in my office putting the final touches on my column or revising a few pages of my novel, I hear footsteps in the street, and I think, I could almost swear, that it’s the mailwoman out delivering mail at the wrong time of the day. I go out onto the balcony and I do’t see anyone there or maybe I see some drunk on his way home, vanishing around a corner. Nothing’s wrong. There’s no one there. But when I go back to my desk, I hear the steps again, and then I know that the mailwoman is working, that even through I can’t see her she’s making her rounds and she couldn’t ahve picked a worse time. And then I stop working on my column or my chapter and I try to write a poem or spend the rest of the evening writing in my diary, but I can’t. The sound of her sensible shoes keeps echoing in my head. You can hardly hear it, and I know how to make it go away: I get up, walk to the bedroom, take off my clothes, and get into bed, where I find my girlfriend’s sweet-smelling body. I make love to her, sometimes with great tenderness, sometimes violently, and then I sleep and dream that I’m being inducted into the Academy. Or not. It’s just a manner of speaking. Actually, sometimes I dream I’m being inducted into Hell. Or I dream that I’ve been castrated, and that with the passage of time two tiny testicles, like colorless olives, sprout abck between my legs, and I fondle them with a mixture of love and fear and keep them secret. Day chases away the ghosts. Of course, I don’t talk to anybody about this. I pay for my relationship with the mailwoman with a few nightmares, a few auditory hallucinations. It could be worse. I can handle it. If I were less sensitive, I’m sure I wouldn’t even remember her anymore. SOmetimes I actually have the urge to call her, to follow her on her route and watch her at work, for the first time. Sometimes I feel like meeting her at some bar in her neighborhood, which isn’t my neighborhood anymore, and asking about her life: whether she has a new lover, whether she’s delivered any letters from Malaysia or Tanzania, whether she still gets the same Christmas bonus. But I don’t do it. I settle for hearing her footsteps, fainter and fainter. I settle for thinking about the hugeness of the Universe. Everything that begins as comedy ends as a horror movie.

புத்தகத்தின் முதல் பாகத்தில் பெரும்பாலும் கவிஞர் ‘குழுவில்’ இருந்தவர்களின் வாழ்வுகள், சந்திப்புகள், அதன்பிறகு பெலானோ மற்றும் லிமா இருவரின் உலகப் பயணங்கள், நாவலின் இறுதியில் டினஹேரோ என்ற கவிதாயினி குறித்த தேடல் என்று எண்ணற்ற பாத்திரங்கள் - ழோர் பெரெக்கின் Life: A user’s manual போன்ற எண்ணற்ற உதிரிப் பாத்திரங்கள் கொண்ட நாவல்களில் பாத்திர விவரிப்புக்கள் பெரும்பாலும் கத்தி வைத்துக் கீறியது மாதிரி துல்லியமாக ‘அமைக்கப்பட்டிருக்கும்’ - அவற்றின் ‘செயல்கள்’ அல்லது எதுவும் குறித்த, உணர்வுக் குழப்படிகள் அற்ற வெகு நேரான, துல்லியமான விவரணை அந் நாவலுக்குத் தேவையான அணுக்கத்தை (ambience) அளிக்கும். தமிழில் இதை வலிந்தோ அன்றியோ அனாயாசமாகச் செய்திருப்பவர் நகுலன். நகுலனின் புத்தகங்களின் எழுத்துக்களை விட வெகு துக்ககரமானதும் அசாதாரணமான ஆழங்கொண்டதுமானது அவரது எழுத்துக்கள் மத்தியில் கிடக்கும் வெற்றிடம்  - அவரது வாழ்க்கை வழி வந்து விழுந்திருப்பதாக நினைக்கக்கூடிய வெற்றிடம் - அது ஒரு முற்றுமுழுதான urban angst. சுஜாதா, அசோகமித்திரன், ஆதவன், கோபிகிருஷ்ணன் என்று ஒரு ஏணி அமைத்தால் அதில் மேலுள்ள படிகளில் ஒன்றாக நகுலன் இருப்பார். வௌவால் பார்வையில் ஏணியின் கடைசிப் படியிலும் இருப்பார். சில சமயங்களில் பாத்திரங்களின் பெயர்களைக் கழற்றிவிடுவது அல்லது சத்தே அற்ற பெயர்களைப் பாத்திரங்களுக்கு வைப்பதும், குணாதிசயங்களை ஒட்டச் சுரண்டி எடுத்துவிடுவதும் அவற்றின் ‘செயல்களை’ மேலும் புதிர்மிக்கதாக ஆக்குவதை கால்வினோ போன்றவர்களின் கதைகளில் பார்க்கலாம் - மேலே குறிப்பிட்ட Traveler உட்பட. பொலான்யோவினது மேலே உள்ளதுபோல வெகு சரளமான, சிக்கலோ அலங்காரங்களோ அற்ற நடை. கிட்டத்தட்ட அவரது அனைத்துக் கதைகளும் எழுத்தை, எழுத்தின் அடையாளத்தை, எழுதுபவர்களை மையமாகக் கொண்டவை - எழுதுபவர்களின் தொலைதல் மற்றொரு முக்கிய முடிச்சு; அவரது 2666 நாவலிலும் கூட பென்னோ வான் ஆர்ஹிம்போல்டி என்ற ஜெர்மானிய எழுத்தாளரை கல்விநிறுவனங்கள் சார்ந்த நிபுணர்கள் தேடுகிறார்கள். அவரது பிற ‘Nazi Literature in Americas’ போன புனைவு-கலைக்களஞ்சிய வடிவப் படைப்புக்களும், அற்புதமான ‘One night in Chile’ போன்ற குறும்படைப்புக்களும் கூட எழுத்தாளர்களை அடிப்படையாகக் கொண்டவை. One night in Chileன் மையப் பாத்திரமான பாதிரியாரும் இலக்கிய விமர்சகர் - அடிப்படையில் தன்னை ஒரு கவிஞர் என்னும் பொலான்யோ அந்தக் குறுநாவலின் ஒரு கருவை இந்தக் கவிதையிலிருந்து எடுத்திருக்கலாமென்று தோன்றுகிறது. இந்த நாவலை எழுதியவர் பிறப்பால் ஒரு சீலே நாட்டவர், தென்னமெரிக்கர், ஸ்பானிய மொழி பேசுபவர், மெக்ஸிகோவில் வசித்தவர், ஸ்பெயினில் இறந்தவர், இவரது எழுத்து இப்படிப்பட்டது, இவர் தொடர்ந்து ஆக்டேவியோ பாஸ், இஸபெல் அயெந்தெ போன்ற லத்தீன் அமெரிக்க பெருந்தலைகளைத் தாக்கினார் போன்ற, இந்த நாவலை ஒரு ‘கட்டமைப்புக்குள்’ வைத்துப் பார்க்க உதவும், இதுமாதிரியான ஒரு புது எழுத்தாளரை அறிந்த ‘வரிசையில் நிறுத்த உதவும்’ தொகுப்புத் தகவல்கள் வலையில் ஏராளமாகக் கிடைக்கின்றன. இது தாண்டி, பொலான்யோவின் தனிப்பட்ட வாழ்வுக்கும் அவர் எழுதியுள்ள இரண்டு ‘பெரும்’ நாவல்களுக்கும் (ஆங்கில மொழிபெயர்ப்பில் இவை இரண்டும் கிட்டத்தட்ட 1600 பக்கங்கள்), சில சிறு படைப்புகளுக்கும் கவிதைத்தொகுதி ஒன்றுக்கும், One night in Chile போன்ற குறுநாவல்களுக்கும் அவற்றை ஏதோவொரு தருணத்தில் வைத்து வாசிப்பவனுக்கும் என்ன தொடர்புகள் நிகழக்கூடும், அதைவிட முக்கியமாக, அது மூலம் உருவாகும் பொலான்யோ குறித்த ‘பிம்பத்தை’ நுண்நிர்மாணங்கள் வழி துரிதமாகப் பிரதிஷ்டை செய்யத் தூண்டக்கூடிய ‘உந்துதலை’ இந்தப் புத்தகம், இலக்கியம் என்ற வஸ்துவின் மேன்மையை அதன் அபத்தம் வழியே எழுதிப் பகடிசெய்கிறது - எழுத்து என்ற சம்பவத்தை கிட்டத்தட்ட ஷ்ரோடிஞ்சரின் பூனை மாதிரி ஆக்கி. சுவாரஸ்யமாய்.

இங்மார் பெர்க்மனின் ஃபானி & அலெக்ஸாந்தர் படத்தில் ஏக்தால் குடும்ப வீட்டின் பிரம்மாண்டம் பெரும்பாலும் அலெக்ஸாந்தரின் கண்கள் வழி விரியும். கணக்கற்றவர்கள் நடமாடும் அப் படத்துள் நிரம்பி வழியும் நிறங்களைத் தாண்டி குஸ்தாவ் ஏக்தாலுடன் உறவு வைத்துக்கொள்ளும் மாய் என்ற வேலைக்காரப் பெண்ணின் உடையின் நிறம் நினைவில் தங்கியிருந்தது. இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்க அணுகுண்டு தயாரிப்புக்காக யுரேனியத்தின் பிற உபயோகங்கள் சிலகாலம் தடைசெய்யப்பட்டிருந்தது என்று கேள்விப்பட்டேன். அதுவரை யுரேனியம் உணவுத் தட்டுக்களுக்கு ஒரு குறிப்பிட்ட சிவப்பு நிறத்தை ஏற்றப் பயன்பட்டிருந்தது. அத் தடை இருந்த அந்தக் காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட நிறம் ஒரு குறிப்பிட்ட காரணத்தால் கழற்றி எடுக்கப்பட்டது என்பதை எப்படி யோசித்துப் பார்ப்பது - இது வெறும் நிறுத்தம் அல்ல, ஒரு நிறத்தை இல்லாமலாக்கல். ஒரு உயிரினத்தின் அழிவு, ஒரு கட்டிடத்தின் சிதைவு, ஒரு பெரும் அணையின் முறிவு போலன்றி ஒரு நிறத்தின் மறைவு என்பது கற்பனை செய்யச் சிக்கலான விஷயம் - நிறத்தின் இருப்பைக் கற்பனைசெய்வது அசலில் இன்னும் சிக்கலானதென்பதால். இல்லாத நிறத்தின் மறைவு குறித்து எப்படி எழுத.

உண்ணும் மனித முதுகு
உண்ணும் மனித முதுகு

-சன்னாசி

ப்ளாக்பெர்ரியை நோண்டியபடி

ஒரு அரசரின்

அறையைக் கடந்து சென்றேன்

வெட்டித் தோலுரித்து

ஊன்றி நிறுத்தப்பட்ட

ஓங்கி உயர்ந்து கொழுத்த

இரண்டங்குலச்

சதுரமணிக்கட்டு ஒன்பதடுக்குலகின்

மூலையொன்றில்

ஏழெட்டு பெரும் அறைகளில் தளும்பித் தெறிக்கும்

குறுநிலம்

குடிமக்கள்

காகிதக் கட்டுகள் க்ளிப்புகள்

பைப்பெட்டுகள் சதுர அட்டைப்பெட்டிகள்

யந்திரங்கள்

ஒருக்களித்த கதவுள்

கணினித் திரைமுன்

அரசரின் நீல வஸ்திர முதுகு

பாதி நரைத்த கழுத்து மடிப்பு

என் பார்வைக்குச் சிக்கா

உணவுநோக்கிக் குனிகிறது

கண்களின் கலக்கம்

சுவர்முட்டு

Ave Maria
<object width="425" height="344">

<param name="movie" value="http://www.youtube.com/v/2uYrmYXsujI&hl=en&fs=1&"></param>
<param name="allowFullScreen" value="true"></param>
<param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/2uYrmYXsujI&hl=en&fs=1&" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>

Inglourious Basterds
இரண்டாம் உலகப் போர் குறித்து, பிரபலமான ஸ்பீல்பர்கின் ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் தொடங்கி, ஐரோப்பிய  மேம்போக்கான அபத்தநகைச்சுவைப் படங்களான “எப்படி நான் இரண்டாம் உலகப் போரைத் தொடங்கினேன்” (Jak rozpętałem drugą wojnę światową), சமீபகாலங்களில் பார்த்த பிரமாதமான படங்களிலொன்றான ஜெர்மன் Downfall (Der Untergang) வரை கணக்கற்ற படங்கள். குறிப்பாக, சமீபத்தில் பார்த்த உலகப்போர்/பிந்தைய காலகட்டம் குறித்த ஜெர்மன் மொழிப் படங்களில் The lives of others குறித்து தமிழ் வலைப்பதிவுகளில் படித்திருக்கிறேன், Downfall குறித்து அதிகம் படித்த நினைவில்லை; நிச்சயம் பார்க்கப்படவேண்டிய சமீபத்திய படங்களில் ஒன்று என்று என் தீவிரமான பரிந்துரை இதற்கு. சற்றுப் பழையதெனில் Das Bootம்.

டாரண்டினோவின் இன்க்ளூரியஸ் பாஸ்டெர்ட்ஸ் படம் ஹிட்லரை, யூதப் படுகொலைகளை, இரண்டாம் உலகப் போரை ஒரு சட்டகக் கருவியாக (framing device) மட்டும் கொண்டு, திரைப்படங்களால் வரலாற்றை எரித்திருக்கிறது. இந்தப் படத்தின் முடிவில் ஹிட்லரை, கெப்பல்ஸை, கோயரிங்கை, அமெரிக்கத் தெற்கத்திக்காட்டான் ப்ராட் பிட் தலைமையிலான ஒரு யூத-அமெரிக்க, யூத-ஜெர்மானிய மானாவாரிப் படைக்குழு சுட்டுக் கொன்றுவிடுகிறது, அனைத்து நாஸி பெருந்தலைகளும் ஒரு திரையரங்குக்குள் வைத்து எரித்துக் கொல்லப்பட்டுவிடுகிறார்கள். இரண்டாம் உலகப் போர் இந்தத் திரைப்படத்துக்கு ஒரு குறி அல்ல - “வில்லனைக் கொல்லு” என்னும் விறுவிறுப்பான திரைப்படங்களுக்கான முடிச்சு, படம் “வெளியான மொழி” குறித்த கவலையின்றி எப்படியொரு மொழிக்கலவையைக்கொண்டும் பாவனைகளைக்கொண்டும் வரலாற்றை எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் என்பது.

படத்தின் தொடக்கத்தில் நாஸிகள் ஆக்கிரமித்துள்ள ஃபிரான்ஸில், யூதர்களை ஒளித்துவைத்துள்ள ஒரு ஃபிரெஞ்சு மாட்டுப்பண்ணை உரிமையாளர்/விவசாயியிடம் வரும் நாஸி ‘யூத வேட்டை’ அதிகாரியின் பேச்சு இப்படியாகப் போகிறது. சந்தேகங்கள் என்று சில சிந்தனைகளை முன்வைக்கிறார் -

எலிகளைப் பார்த்தால் ஏன் நமக்கு அருவருப்பு வருகிறது? இந்த வீட்டில் நீங்களும் நானும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு எலி வீட்டு வாசல் வழியாக வந்தால் அதை எப்படி வரவேற்பீர்கள்? அப்படியா, அப்போது எலிக்கும் அணிலுக்கும் என்ன பெரிய வித்தியாசம்? எலி மேல் உள்ள அசூயையும் வெறுப்பும் அணில் மேல் ஏன் இருப்பதில்லை? எலி பரப்பும் அதே நோய்களை அணிலும் பரப்பும். வாலைத் தவிர்த்துப் பார்த்தால் எலியும் அணிலும் ஒரே மாதிரித் தானே இருக்கிறது? - இந்த தர்க்கத்தின் பின்னுள்ள எலிகள் யூதர்கள் (எந்த ஒரு ஒடுக்கப்படும் இனக்குழுவுக்கும் பொருந்தக்கூடியதுதான்). நமது கீழைத்தேய அக(அ)ஹிம்சா அப்போஸ்தலர் ஜெயமோகன், அமெரிக்கா ஜப்பான் மேல் குண்டு போட்டதை மறக்கடிக்கத்தான் யூதப் படுகொலைகளை தனது ராட்சத ஊடகங்கள் வழி தொடர்ந்து முன்வைக்கிறது என்பது மாதிரி (யூதர்களின் படுகொலைகள் உலக மனசாட்சிக்கு விடப்பட்ட பெரிய வினா.. மானுடம் என்பது என்ன என்பதையே மறு வரையறை செய்தவை  அவை. அதே சமயம் அவை சற்றே மிகைப்படுத்தப்பட்டுவிட்டனவா என்ற ஐயம் எனக்கு இந்நாளில் உள்ளூர உருவாகியிருக்கிறது. ஆயிரக்கணக்கான நாவல்கள் ,திரைப்படங்கள் மூலம் அமெரிக்கா அந்த யூதப்பேரழிவை ஒரு மானுடபிரச்சினையாக நிலைவில் நிலைநாட்டிக்கொண்டே இருக்கிரது. அதைவிடப்பெரிய மானுட அழிவான  நாகசாகி – ஹிரோஷிமா  அணுகுண்டு வீச்சு பேசப்படுவதே இல்லை. இது பேசப்படுவதே அதை மறைப்பதற்காகத்தானா? சமீபமாகத்தான் டேவிட் இர்விங் போன்ற பேரழ்வு மறுப்பாளளர்களின் வாதங்களை வாசிக்கிறேன்.  ஆனால் யூதப்படுகொலைகள் நிகழ்ந்தன என்பதில் எனக்கு ஐயமில்லை.  அதேசமயம் இப்பேரழிவுகள் இவர்கள் இன்று சொல்லும் அளவுக்கு பேரளவில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டனவா? அல்லது அமெரிக்கா நிகழ்த்திய மானுட அழிவை மறைப்பதற்காக — அமெரிக்கா உலகை காத்தது என்ற வரலாற்றுப் பாடத்தை உருவாக்குவதற்காக- இவை முன்வைக்கப்படுகின்றனவா?) செத்தான் அஹமதினேஜாத் ரேஞ்சில் செய்த அங்கஹதத்தைப் படித்து, இதுவரை எடுத்த தொள்ளாயிரத்து இருபத்தேழு விக்கலுடன் இன்னும் இரண்டு சேர்த்து இருபத்தொன்பது. சந்தேகம் இருந்தால், மேற்கொண்டு அமெரிக்காவில் இருக்கும் நாட்களில் வைஸந்தால் மையத்துக்கு ஒரு கடிதம் எழுதியோ தொலைபேசியோ, அசலில் அத்தனை யூதர்கள் செத்தார்களா என்ற சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம். அல்லது, நாங்கள் ஜூஸ் மாதிரி என்ற அசோகமித்திரனிடம் ஜெயமோகன் ஜூஸ்னா எந்த ஜூஸ் சார், ஆரஞ்சு ஜூஸா சாத்துக்குடி ஜூஸா என்று கேட்கலாம். இந்த நுண்ணுண்மைகளை நோக்கிய அசட்டுப்பிடிவாதம் தேறாத கேஸ் என்பதால் அதை இங்கேயே விட்டுவிடலாம்…

பாஸ்டெர்ட்ஸ் படத்தின் நாஸி ஆஃபீஸருக்கு படத்தில் இந்த மாதிரி ‘பொதுப்புத்தியைக் கேள்விக்குள்ளாக்கும் சந்தேக’ சிந்தனைகளுடன் அதிகாரமும் இருப்பதால் பெரிய பிரச்னைகளெல்லாம் இல்லை; தான் பேசிக்கொண்டிருக்கும் தரைக்கடியில் ‘எலிகள் போல’ ஒளிந்திருக்கும் யூதர்களை மெஷின்கன்னால் போட்டுத் தள்ளிவிடுகிறார். அபாரமான திரைக்கதை அமைப்புக்கு ஒரு துல்லியமான உதாரணம் இக் காட்சி - ஒரு நீளமான, அசௌகரியமான இறுக்கம் இறுதியில் வெடிப்பது; நிதானமான ஒரு பாத்திரம் (விவசாயி) படிப்படியாக சில நிமிடங்களில் நொறுக்கப்படுவது. கற்பனையான புராணீக உயிரினங்களைப்பற்றி போர்ஹேஸ் The book of imaginary beings என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்; கிட்டத்தட்ட ஐம்பது வருடங்கள் கழித்து ரொபர்ட்டொ பொலான்யோ Nazi Literature in the Americas என்று கற்பனையான நாஸி அனுதாப எழுத்தாளர்களைக்குறித்த ‘கலைக்களஞ்சிய வடிவிலான’ புத்தகமொன்றை எழுதியிருக்கிறார். வரலாறு என்பது பெரும் மோசடி - மோசடி என்பதை அறவியல் மீதான துரோகமாய்ப் அன்றி ஒரு அபத்த நிகழ்வாகப் பார்ப்பது குறித்துணர்த்தும் இது போன்ற புத்தகங்கள் மாதிரித்தான் ஒருவகையில் இந்தப் படமும். டாரண்டினோவுக்கு வரலாற்றுக்குத் தேவையற்ற முக்கியத்துவம் கொடுக்கவில்லை - ஹிட்லர் ஒரு வில்லன், வில்லனுக்கு இன்னின்ன மாதிரி அடியாட்கள், நாஸி அடியாட்களைக் கொன்று அடியாட்களின் தலைத்தோலைச் சீவி எடுக்கவேண்டும், அல்லது பேஸ்பால் கட்டையால் ஃபென்வே பார்க் போட்டிகள் குறித்த தகவல்களை அள்ளி விட்டுக்கொண்டு நாஸி ஆஃபீஸரின் தலையை நொறுக்கவேண்டும், அல்லது இரட்டை ஏஜெண்டான ஜெர்மன் நடிகையின் காலில் தோட்டா பாய்ந்த ஓட்டைக்குள் விரலை விட்டுத் துடிக்க வைக்கவேண்டும். சுட்டுக் கொல்லப்படும் யூதக் குடும்பத்துப் பெண் ஒருத்தி தப்பித்து ஃபிரான்ஸில் ஒரு திரையரங்கு உரிமையாளராகி நாஸி பிரச்சார மந்திரி கெப்பல்ஸின் பிரச்சாரத் திரைப்படம் (தேசத்தின் பெருமை/Nation’s pride - கிட்டத்தட்ட முன்னூறு பேரை தனியொரு ஆளாகச் சுட்டுக்கொன்ற நாஸிப் படைவீரனின் அந்த குறிப்பிட்ட சாகஸத்தை விளக்கும் திரைப்படம்) திரையிடப்படும் தனது திரையரங்கின் கதவுகளைப் பூட்டிக்கொண்டு அனைவரையும் எரித்துக் கொன்றுவிடுவது குறித்த மற்றொரு கிளைக்கதை.

ஆக, டாரண்டினோவின் இந்த நாஸி-எதிர்ப்பு   ‘பிரச்சாரப்’ படத்துள் (பாஸ்டெர்ட்ஸ்) கெப்பல்ஸின் ஒரு ‘நாஸிப் பிரச்சாரப் படம்’ (தேசியப் பெருமை). அமெரிக்க டி.டபிள்யு.க்ரிஃபித்தின் Birth of a Nationஐ பெயரளவில், கருத்தளவில் நினைவுபடுத்தும் இந்த ‘நாஸிப் பிரச்சாரப் படத்தை’ இன்க்ளூரியஸ் பாஸ்டெர்ட்ஸ் படத்துக்காக அசலில் இயக்கியது இன்க்ளூரியஸ் பாஸ்டெர்ட்ஸில் கரடி யூதன் என்ற வேடத்தில் வரும் ஈலை ராத். கெப்பல்ஸின் படத்தை டாரண்டினோவின் படத்துக்கு உள்ளே திரையில் பார்க்கும் நாஸி அதிகாரிகள், அமெரிக்கர்களை ஃப்ரெடரிக் ஸோல என்ற அந்த நாஸிப் படைவீரன் குருவி சுடுவது போல சுட்டு வீழ்த்துவதை ரசித்து வெடித்துச் சிரிக்கிறார்கள், ஆரவாரிக்கிறார்கள். டாரண்டினோவின் படத்துக்கு வெளியே திரையரங்கில் படம் பார்க்கும் பார்வையாளர்கள், நாஸி அதிகாரிகளின் தலைத்தோலை கரகர என்று அறுத்து எடுக்கும்போது, பேஸ்பால் கட்டையால் சிதறுதேங்காய் போலத் தலையை நொறுக்கும்போது, நெற்றியில் கத்தியால் ஸ்வஸ்திகாவைக் கீறும்போது வெடித்துச் சிரிக்கிறார்கள், ஆரவாரிக்கிறார்கள். படத்துள்ளிருக்கும் படத்துக்கு நாஸி அதிகாரிகள் கைதட்டுகிறார்கள், படத்துக்கு வெளியே ரசிகர்கள் கைதட்டுகிறார்கள். தாராளவாதிகளின் ‘திரிபுக்குள்’ தீவிரவாதிகளின் ‘உண்மை’! படத்தில் ஆங்கிலம் கிட்டத்தட்ட கால்வாசி நேரம் மட்டுமே; மிச்ச நேரத்தில் ஃபிரெஞ்சு அல்லது ஜெர்மன் மொழி, திரையில் துணையெழுத்துக்கள் - அவ்வளவே. தனது பலவீனத்தை உணரும் பார்வையாளனின் பலவீனத்தை நோக்கி வலிந்து எடுக்கப்படுவதில்; சமகாலத் திரைப்பட இயக்குனர்களில் வெகுஜனப் போக்குகள், கலாச்சாரம், ரசனை போன்றவற்றைத் திருகி ஒரு வினோத அழகியலுடன் தருவதில், ரசனைச்சுரண்டலை வெளிப்படையாக அறிவித்துச் செய்வதில் என டாரண்டினோவின் படங்கள் கைதேர்ந்தவை - சமகால இயக்குனர்களின் படங்களில் பெரும் ஒப்புமைகள் ஏதும் இல்லாதவை. அவரது கச்சாப்பொருட்கள் கடந்தகாலம், அதன் திரைப்படங்கள். “நான் சொல்லநினைப்பது இது” என்பதல்ல, “நான் சொல்லநினைப்பது இப்படி” என்பது டாரண்டினோ படங்களின் கோணம், அதுவே அவற்றின் பெரும் வசீகரமும் கூட.

ஹிட்லர், கெப்பல்ஸ் இருவரும் இப் படத்தின் கோணத்துக்கேற்பச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படத்தைப் பார்த்தீர்களானால் பின்பு Downfall திரைப்படத்தை தொந்தரவற்ற தனிமையில் பார்க்க முயலவும் - இப்படம் குறித்து எழுத நினைத்தது விட்டுப்போனது. முதலில் டௌன்ஃபால் பார்த்திருந்ததால் பாஸ்டெர்ட்ஸில் சில காட்சிகளை அதன் நோக்கத்தையும் தாண்டி நாடகீயமாக மட்டுமே பார்க்க முடிந்தது. திரையரங்க நுழைவுச்சீட்டு வாங்கியது ‘x டிக்கெட்டுகள் பாஸ்டர்ட்ஸுக்கு’ என்று.

சிமெண்ட் படிக்கட்டுகள்
சிமெண்ட் படிக்கட்டுகள்

-சன்னாசி

எட்டாக் கண்ணாடிமுன்

ஏறும் சொல்

அண்ணப்பிளவு

ஒரு பெரும் குடிசை கீழ்

ராஜேஸ்வரி

சோற்றில் தண்ணீரை ஊற்றுகிறாள்

அலுமினியத் தட்டு

நீரில் மூழ்குகிறது

பருக்கைப் பிணங்கள்

மேலெழும்பி மிதக்கின்றன

விறைத்து

முறுக்கி ஒடித்து நெளித்த

விளிம்பு வெடிப்புக்குள் ஒரு

ஊறிக் கறுத்த ஈக்கி

வாசற்படியிலொரு கட்டு

தீப்பெட்டி லேபிள்களைக்

கவ்வி அமரும் தெருநாய்க்

கந்தக இளைப்பு

சதை

ஜடை

பாவாடை

இறுக்கிப் பிடித்த

தங்கநிறக் கவசவிளிம்பு வைத்த

ஆரஞ்சு ஜாக்கெட்

இடுப்புக் குடம்

ஒற்றைக்

கால் கவரிங் கொலுசு

அனைத்தையும்

கழற்றி வைத்து

வளைந்தமர்ந்து

பிஞ்சு முதுகெலும்பு

சோற்றுப் புடைத்த வயிறு

கட்டையில் தடவிக்

கையில் பசை

அகண்டு விரிந்த வானத்தில்

ராட்சதத் தும்பிகள்

Karlheinz Stockhausen: Gruppen
<object width="425" height="344">

<param name="movie" value="http://www.youtube.com/v/MsX1UMednjg&hl=en&fs=1&"></param>
<param name="allowFullScreen" value="true"></param>
<param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/MsX1UMednjg&hl=en&fs=1&" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>

<object width="425" height="344">

<param name="movie" value="http://www.youtube.com/v/RI-oy4iw3vE&hl=en&fs=1&"></param>
<param name="allowFullScreen" value="true"></param>
<param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/RI-oy4iw3vE&hl=en&fs=1&" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>

<object width="425" height="344">

<param name="movie" value="http://www.youtube.com/v/xpgHrXFNmn8&hl=en&fs=1&"></param>
<param name="allowFullScreen" value="true"></param>
<param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/xpgHrXFNmn8&hl=en&fs=1&" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>