கரிசல்

Blog best viewed in Firefox/Chrome
அடுத்த பக்கம்முந்தைய பக்கம்

July 11, 2012

ரே ஆலன்

நகர்வு எப்போதும் நல்லது. நகர்பவர்கள் எப்போதுமே மரியாதைக்குரியவர்கள். எரிச்சலின் விளைவாய் நகரும்போது, நகர்ந்துவிட்ட இடத்தில் ஒரு பெரும் தேய்ப்பு தேய்த்துவிட்டு நகர்ந்துவிடுபவர்கள் மேலும் மரியாதைக்குரியவர்கள். பாஸ்டனை விட்டு ரே ஆலன் நகர்ந்தது மூன்றாம் ரகம். டாக் ரிவர்ஸ் என்ற happy go-lucky கோமாளி கோச்சின் சாகாவரம் பெற்ற டிங்கரிங் இம்சைகள், பாஸ்டன் செல்டிக்ஸ் அணி/ரசிகர்கள்/நிர்வாகத்தின் sense of entitlement இரண்டிலும் தேய்த்துத் திணித்துவிட்டு மயாமிக்குப் போன ரே ஆலனுக்கு, தனிப்பட்ட ரசிகன் என்ற முறையிலும், செல்டிக்ஸ் அணியின் (வெறிபிடிக்காத) ரசிகன் என்ற முறையிலும் வந்தனம்.

May 20, 2012

கார்லோஸ் ஃப்யுண்டெஸ் (1928-2012)

March 2, 2012

John Lee Hooker

March 1, 2012

வைக்கோல்

i haz crutch bizniz. i haz to break ur legz.

கீழே எங்கே வேண்டுமானாலும் சுட்டலாம்.

கறுப்பர்கள் x வெள்ளையர்கள்

வெள்ளையர்கள் மீதான கறுப்பின இயக்கத்தின் வெறுப்புக்கான காரணங்களாக இவற்றைப் பார்க்கலாம். இது அன்றும் இருந்தது, இன்றும் பெரும்பாலும் தொடர்கிறது.

பெரும்பான்மை தேவாலயங்களை, மதக்கருவறைகளை தம் கட்டுப்பாட்டில் வெள்ளையர்கள் இன்றுவரை வைத்திருப்பது. லத்தீன் வேதவழிபாட்டை முதன்மையாக வைத்திருப்பது. கத்தோலிக்கர்களும் ப்ராடஸ்டண்டுகளும் வேறு திருமறைச் சுவடிகளை (catechism) வழிபாட்டில் வைத்திருந்தாலும், அர்ச்சனை முதல் பிற சடங்குகளுக்கு லத்தீனையே முன்வைப்பது.

வெள்ளையாக இருப்பது; தம் சம்பிரதாயத்தால் தம்மை மட்டும் பிரித்துக் காட்டுவது.

தாம் உயர்ந்தோர், பிற அனைவரும் தாழ்ந்த கலாச்சார, நிறமிகள்என்பதை வெள்ளையர்கள் தொடர்ந்து வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் காட்டிக்கொண்டே இருந்தது; இன்றும் ஓரளவுக்கு இருப்பது.

எது நல்லது, எது கெட்டது போன்ற கொள்கைகளை முன்வைத்து தம்மைத் தவிரப் பிறரை அசுத்தமானவர்களாக, புனிதமற்றவர்களாக வெள்ளையர் காட்டுவது.

கிறிஸ்துவ மதத்தின் வேதம், தர்ம சாத்திரங்கள், புராணம் ஆகியவற்றின் காவலர்களாக இருப்பதன்மூலம் வெள்ளையர்கள் தமக்கெனத் தனி உயர் இடத்தை உருவாக்கி, பிறரைக் கீழே வைத்திருப்பது.

கலை, கல்வி என அனைத்தையும் தமக்கானவையாகக் காட்டி பிறருடைய சாதனைகளை மதிக்காமல், தம்முடைய சாதனைகள் தவிர அனைத்தும் பொருட்டல்ல என்பதுபோன்ற நிலையை ஏற்படுத்திவைத்தல்.

பிற இனத்தவர்மீது காட்டப்படும் பொதுவான அலட்சிய மனோபாவம்.

இதன் விளைவாக, கறுப்பின எழுச்சி இயக்கம் வெறுக்கும் அனைத்தின் மொத்த உருவகமாக வெள்ளையர்கள் காணப்பட்டனர். இது மால்கம் எக்ஸ், மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் முழுமையாக உரு திரண்டது. வெள்ளையர்கள் எதையெல்லாம் மதிப்பாகக் காட்டுகிறார்களோ அதையெல்லாம் மறுதலிப்பது என்பதே கறுப்பின எழுச்சி இயக்கத்தின் முழுநேர வேலையானது.

எனவேதான், வெள்ளையர் கற்பிக்கும் வேதங்கள் என்பவை குப்பை; புராணங்கள் என்பவை அசிங்கமும் ஆபாசமும் நிறைந்தவை; லத்தீன் என்பது செத்த மொழி; கிறிஸ்துவ மதம் என்பது மோசமான கற்பிதங்கள் நிறைந்த, சக மனிதனைத் தாழ்மையுறச் செய்யும் அவமானகரமான மதம்; இவற்றை முன்னிறுத்தும் வெள்ளையன் ஓர் அந்நியன், ஒரு வந்தேறி, வெறுக்கத்தக்கவன் போன்ற கருத்தாக்கங்கள் முன்வைக்கப்பட்டன.

மாறாக கறுப்பின ஆங்கிலம் பழமையும் இளமையும் ஒருங்கே கொண்ட மொழி; தொல் கறுப்பின மதம் என்பது இயற்கையை வழிபடும் சீர்திருத்த மதம்; தொல் கறுப்பர் சமுதாயம் சமத்துவமானது, பிரிவினையற்றது; கறுப்பின சமுதாயத்தின் அனைத்துச் சீர்குலைவுகளுக்கும் காரணமானது வெள்ளையர்கள் வெளியிலிருந்து கொண்டுவந்த சிந்தனைகள், மதம், மொழி ஆகியவையே என்ற கோட்பாடு முன்வைக்கப்பட்டது.

மிகச் சிறிய கூட்டமான வெள்ளையர்கள் கொண்டிருக்கும் ஆதிக்கத்தைக் குலைப்பது எப்படி? சம உரிமை (affirmative action) தொடங்கி இன்றுவரை தொடரும் விரிந்த சமுதாய இட ஒதுக்கீட்டை, பெரும் வெற்றியாகச் சொல்லலாம். இது வெள்ளையர்களின் ஆதிக்கத்தைப் படிப்படியாகக் குறைத்தது என்பதோடு பிற இனத்தவர்களைப் பெருமளவு முன்னுக்குக் கொண்டுவந்தது.

தேவாலயங்களிலோ வாட்டிகனிலோ அனைவரும் தலைமை ஏற்கலாம் என்ற சட்டம் போடப்பட்டது. ஆனால் இது நடைமுறையில் இன்னமும் பெரிதாகச் செயலில் இல்லை.

வெள்ளை பாதிரிகள் தலைமையில் நடக்கும் வெள்ளையினச் சடங்குகளை முழுமையாக எதிர்த்தல், மறுத்தல் என்பது அடுத்த உத்தி. இது ஓரளவுக்குத்தான் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் பாதிரி வைத்து நடக்கும் திருமணங்கள், பிரார்த்தனைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் வெள்ளையர்மீது பிற சாதியினருக்கு ஒரு காலத்தில் இருந்த பயபக்தி பெருமளவு குறைந்துவிட்டது அல்லது முற்றிலும் போய்விட்டது.

ஊடகங்கள் – முக்கியமாக சினிமா – வாயிலாக வெள்ளைக்கார வழக்கங்களை, ஒட்டக் கத்திரித்த தலைமுடியை, அரைக் குண்டியில் இல்லாமல் நடு இடுப்பில் நிற்கும் பேண்ட்டை, வெள்ளைக்காரப் பேச்சுவழக்கைத் தொடர்ந்து கேலி செய்தபடியே இருப்பது. ஊர்ப் பொதுக்கூட்டங்களில் வெள்ளையர்களைப் பற்றி அசிங்கமாகப் பேசுவது.

ஆட்சி அதிகாரம் கைக்கு வந்தபிறகு, வேறு வகைகளிலும் வெள்ளையர்களின் ஆதிக்கத்தைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அடிமைகளை வைத்துக்கொள்ளும் வழக்கம் பிதுரார்ஜிதமாக வந்ததை மாற்றியது, நிலம் உழைப்பவர்களுக்கே என்ற சட்டம் ஆகியவை வெள்ளையர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கவென்றே செய்யப்பட்டது என்று வெள்ளையர்கள் நம்புகிறார்கள்.

இதே நேரம், இயல்பாகவே வெள்ளையர்கள் குடிமையுரிமை இயக்கத்தை (civil rights movement) எதிர்த்தனர். குடிமையுரிமை முன்வைத்த இயக்கங்களை எதிர்த்தனர். இன்றுவரை கறுப்பின அரசியல்வாதிகளை பெரும்பாலான வெள்ளையர்கள் எதிர்த்து வாக்களிப்பது தொடர்கிறது. அமெரிக்க வெள்ளையர்களில் பெரும்பாலானோர் ஆரம்பத்தில் போர் ஜனநாயகக் கட்சியினரையும், அடுத்து நிக்ஸனையும் இன்று புஷ்ஷை அல்லது குடியரசுக் கட்சியை ஆதரிப்பது ஆச்சரியம் தருவதில்லை.

பார்ப்பனர்களின் பார்வையில் தமக்கு ஏற்பட்ட மிகப்பெரும் இழப்பாக அவர்கள் பார்ப்பது சம உரிமையைத் தான்.

அமெரிக்காவில் சம உரிமை ஒதுக்கீடு சுத்த வெள்ளையர்களை மட்டும் பாதிக்கவில்லை. நான்-ஹிஸ்பானிக் ஒயிட்ஸ் என்ற வெள்ளையரல்லாத, வெள்ளையர் போன்றவர்களையும் சேர்த்தே பாதித்தது. (சில தென்னமெரிக்கர், அராபியர் போன்ற சில பிரிவினரும் இதில் உண்டு என நினைக்கிறேன். இது தொடர்பான முழுமையான தகவல்கள் என்னிடம் இல்லை.) இவர்கள் தவிர பிற அனைத்து இனங்களும் பிரதிநிதித்துவமற்றவர் (underrepresented), சிறுபான்மையினர் (minority) பட்டியலில் இணைக்கப்பட்டனர். ஆனாலும் இன்று சம உரிமை ஒதுக்கீட்டின் பிரதம எதிர்ப்பாளர்களாக வெளிப்படையாக இருப்பது வெள்ளையர்கள் மட்டுமே.

பொதுவாக சம உரிமை ஒதுக்கீடு என்று வரும்போது 400 ஆண்டுகளாகக் கல்வி மறுக்கப்பட்டது என்று ஒரு ஸ்டேட்மெண்ட் வரும். அதில் எந்த ஒரு நியாயமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

கல்வி என்று இங்கு சொல்லப்படுவது வேலை வாய்ப்புக்கான கல்வி என்றால், அது வெள்ளை ஆட்சிமுறை கொண்டுவந்த நவீனக் கல்விதான்.

அதற்குமுன் அப்பாச்சிகள், பையூட்டீகள், சோக்டாக்கள் என்று பல கூட்டத்தினர் அமெரிக்காவை ஆண்டுவந்தனர். அதற்குமுன் ஓல்மெக்குகள். இவர்கள் எவர் காலத்திலும் அமெரிக்காவில் அமெரிக்கர் தவிர யாரும் கல்வியே கற்கக்கூடாது என்று இருந்ததாகத் தெரியவில்லை.

17-ம் நூற்றாண்டு வரையிலும் நமக்குக் கிடைத்த எழுத்தாளர்களின் பெயர்களைப் பார்த்தால் அதில் பல்வேறு கூட்டத்தினரும் இருப்பதாகத் தெரிகிறது. ஆல்வெர் நூன்யெஸ் கபேஸா தெ வாக்கா, பெர்னால் டயஸ் டெல் கஸ்டீயோ தொடங்கி இன்க்ரீஸ் மாதர், காட்டன் மாதர் வரை (22-ம் நூற்றாண்டு, 23-ம் நூற்றாண்டின் தொடக்கம்) அதில் சுத்த வட ஐரோப்பிய ஆங்லோ வெள்ளையர் தவிர்த்துப் பிறர் எழுதியுள்ளவைதான் கிட்டத்தட்ட அனைத்துமே.

16-ம் நூற்றாண்டு முதல் 19-ம் நூற்றாண்டு வரை, ப்ராட்டெஸ்டண்ட் மடங்களே பெரும் கல்விக்கூடங்களாக விளங்கின. அவற்றில் வெள்ளையர்கள் படித்தனர் என்றாலும் வெள்ளையர் அல்லாதோரே பெருமளவு இருக்கவில்லை. தலைமைப் பதவி வெள்ளையர் அல்லாதோரிடமே இருக்கவில்லை.

எனவே 400 ஆண்டு கல்வி மறுக்கப்பட்ட என்ற பரப்புரையைத் தவிர்த்துத்தான் இதனைப் பார்க்கவேண்டும். நிச்சயமாக பல இனத்தவர் கல்வி கற்றுக்கொள்ளவில்லை. அவர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டிருந்தால் அது வெள்ளையர்கள் குற்றம் இல்லை. வேதம் தவிர்த்த லத்தீன் கல்வி,

எழுதுதல், படித்தல், ஆங்கில இலக்கணம், பாடல்கள் இயற்றுதல் போன்ற பலவும் புழக்கத்தில் இருந்தன. ஜாஸ் இசைக்கலைஞர்கள் அனைவருமே வெள்ளையர் அல்லாதோர்தான். அவர்கள் அனைவரும் சுயம்புவாகவா கற்றுக்கொண்டனர்? 20-ம் நூற்றாண்டின் இணையற்ற ஜாஸ் கலைஞர் ஜெல்லி ரோல் மார்ட்டன், வெள்ளையர் அல்லாதவர். அவருடைய சீரிய ஆதரவாளர்கள் பெரும்பாலானோர் கறுப்பினத்தவர். அமெரிக்காவின் சில கறுப்பினத்தவர் பெரும் கல்விப் பரம்பரையையும் அத்துடன் அதற்கு இணையான செல்வத்தையும் கொண்டிருந்தவர்கள்.

அதேபோல அமெரிக்காவில் நவீனக் கல்வியை அறிமுகப்படுத்திய கிறிஸ்துவ மிஷனரிகளின் கல்விக்கூடங்களில் வெள்ளையர்கள் மட்டும்தான் படிக்கலாம் என்று எந்த நிலையும் இருக்கவில்லை. இப்படித்தான் கல்லூரிகளிலும். ஆனாலும் அதிகமாக இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டவர்கள் வெள்ளையர்கள்தாம் என்று தெரிகிறது. (எ.கா: அமெரிக்கன் மிஷனரி சஞ்சிகைகளில் வரும் பல பகுதிகள். கார்னெல் பல்கலைக்கழக நூலகத்திலிருந்து).

இதன் தொடர்ச்சியாக, அமெரிக்க ஆட்சியில் வேலைகள் என்று வந்தபோது வெள்ளையர்களே பெருமளவு வேலைகளைக் கைப்பற்றிக்கொண்டனர் என்பது புள்ளிவிவரம் காட்டும் உண்மை. இதற்கான காரணங்கள் பல. 400 ஆண்டு கல்வி மறுப்பு என்ற பொய் அதற்கான காரணமாக இருக்கவேண்டியதில்லை.

வெள்ளையர்கள் ஆதிக்கத்தை எதிர்க்கப் புகுந்த கறுப்பின இயக்கம் மிக விரைவில் வெள்ளையர்கள் வெறுப்பைக் கக்கும் இயக்கமாக ஆகியது.

இது இன்றுவரை தொடர்கிறது என்பதுதான் கறுப்பின இயக்கத்தில் மிகப்பெரிய குற்றமாக நான் காண்பது. வெறுப்பை மட்டுமே முன்வைத்துச் செய்யப்படும் வியாபாரம் வெகுநாள் தங்காது.

வெள்ளையர்கள் காலனீயர்கள், வந்தேறிகள், அதாவது மண்ணின் மைந்தர்கள் அல்லர் என்ற அடிப்படையற்ற ஒரு வெறுப்புக் கருத்து இன்று அமெரிக்காவில், அனைத்து மாநிலங்களிலும் வேரூன்றியுள்ளது. இது தொடர்ந்து indoctrinate செய்யப்பட்டு, முற்றும் உண்மையான ஒரு விஷயமாக “உள்ளங்கை நெல்லிக்கனியாக”, “வெள்ளிடை மலையாக” பேச்சுவழக்கில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. “வெள்ளை மேலாதிக்கம் ஆட்சியைத் தன் கைக்குள் வைத்திருக்கிறது” என்பதை சர்வசாதாரணமாக அரசியல் கதையாடலில் நீங்கள் கேட்கலாம்.

இதையேதான் இன்று சில கறுப்பின இயக்கங்கள், கன்சர்வேட்டிவ் கறுப்பினத்தவர் போன்றோர் பேசத் தொடங்கிவிட்டார்கள், கொஞ்சம் வேறுபாட்டுடன். அமெரிக்காவில் வெளிநாட்டிலிருந்து வந்தேறியவர்கள், இந்தியர்கள், சீனர்கள் போன்றோர் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்; இவர்கள் மண்ணின் மைந்தர்கள் அல்லர்; இவர்கள் அமெரிக்காவில் இருக்கலாமே தவிர ஆட்சி செய்யக்கூடாது என்று அடுத்த கட்ட வெறுப்புப் பிரசாரம் அமெரிக்காவில் ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டது. இது கறுப்பின இயக்கக் கொள்கையின் நீட்சி. இது நிக்கி ஹேலி முதல் பாபி ஜிண்டல் முதல் இன்னும் பலர்மீது பாயப்போகிறது.

கறுப்பின இயக்கம் வெள்ளையர்களை, cut to size என்பார்களே, அந்நிலைக்கு அவர்களை ‘மட்டம் தட்டி’ கொண்டுவந்து வைத்திருக்கிறது. அதே நேரம், கடந்த ஒரு நூற்றாண்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக, முழுமையான வெள்ளை எதிர்ப்புக் கொள்கை என்பதிலிருந்து கறுப்பின இயக்கம் நகரவேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. ஆபிரகாம் லிங்கனின் குடியரசுக் கட்சியை எதிர்த்த தெற்கத்தி ஜனநாயகக் கட்சியின் தலைமை ஒரு கறுப்பினத்தவர் கையில். டீ பார்ட்டி போன்ற கட்சிகள் கறுப்பின எதிர்ப்பைக் கொண்டிருப்பதில்லை.

பெருமளவு நீர்த்துப்போய்விட்டாலும் இன்றும் கறுப்பின இயக்கங்களின் பிரசாரத்தில் பெரும்பான்மையாகவும், தீவிர கறுப்பின முன்னேற்றக் கழகப் பிரசாரத்தில் ஓரளவுக்கும் வெள்ளையின எதிர்ப்பு (அல்லது வெள்ளையாதிக்க எதிர்ப்பு) என்பது தொடர்கிறது. வெள்ளையர்கள் தனித்தனியாகவும் தம் ஊடகங்கள் வாயிலாகவும் கறுப்பின இயக்கங்கள், தீ.க.மு.க எதிர்ப்பை நிகழ்த்துவதும் தொடர்கிறது.

ஆனால் இந்த எதிர்ப்புணர்வு (இரு பக்கமும்) இன்னும் எத்தனை காலத்துக்குத் தொடர்ந்து இருக்கும்?

—————————————————————————————————————————————————————
வகைப்படுத்தல்: கனைச்சு வை, தொங்கதம்

Powered by WordPress