கரிசல்

Blog best viewed in Firefox/Chrome

July 11, 2012

ரே ஆலன்

நகர்வு எப்போதும் நல்லது. நகர்பவர்கள் எப்போதுமே மரியாதைக்குரியவர்கள். எரிச்சலின் விளைவாய் நகரும்போது, நகர்ந்துவிட்ட இடத்தில் ஒரு பெரும் தேய்ப்பு தேய்த்துவிட்டு நகர்ந்துவிடுபவர்கள் மேலும் மரியாதைக்குரியவர்கள். பாஸ்டனை விட்டு ரே ஆலன் நகர்ந்தது மூன்றாம் ரகம். டாக் ரிவர்ஸ் என்ற happy go-lucky கோமாளி கோச்சின் சாகாவரம் பெற்ற டிங்கரிங் இம்சைகள், பாஸ்டன் செல்டிக்ஸ் அணி/ரசிகர்கள்/நிர்வாகத்தின் sense of entitlement இரண்டிலும் தேய்த்துத் திணித்துவிட்டு மயாமிக்குப் போன ரே ஆலனுக்கு, தனிப்பட்ட ரசிகன் என்ற முறையிலும், செல்டிக்ஸ் அணியின் (வெறிபிடிக்காத) ரசிகன் என்ற முறையிலும் வந்தனம்.

2 Responses to “ரே ஆலன்”

  1. சன்னாசி,

    ரே அலன் பாஸ்டனை விட்டு விலகிச் செல்லும்பொழுது செய்த அதே மரியாதையை இங்கே டொராண்டோ ராப்டர்ஸைவைவிட குறைந்த பணம் கொடுத்த லேக்கர்ஸ் அணிக்குச் சென்ற கனேடியர் ஸ்டீவ் நாஷ் செய்திருக்கிறார். செல்டிக்கைவிட ஒரு மடங்கு அதிக Sense of Entitlement கொண்டது டொராண்டோவின் மேப்பிள் லீஃப் எண்டர்டெய்ன்மெண்ட். ஹாக்கி, கூடைப்பந்து, கால்பந்து என எங்கள் ஊரின் எல்லாவற்றைய்ம் மொத்தமாகக் குத்தகை எடுத்திருக்கும் மே.லீ.ஏ-க்கு அவ்வப்பொழுது நாஷ் போல பலரும் தேய்த்துகொண்டுதான் இருக்கிறார்கள் – குறிப்பாக ஹாக்கியில். உங்கள் வார்த்தைகளையே எடுத்து; டொராண்டோவில் வாசிப்பவன் நேசிப்பவன் என்ற முறையிலும் ஸ்டீவ் நாஷ்-ந் தனிப்பட்ட இரசிகன் என்ற முறையிலும் வந்தனங்ங்கள்.

  2. சன்னாசி says:

    வெங்கட்,

    மைக் டி’அண்டோனியின் run and gun offense க்கும் ஸ்டீவ் நாஷுக்கும் நானும் பெரும் ரசிகன்! கிழக்குக் கடற்கரைக்கு வந்தபின் அண்டோனியும் காணாமல் போய்விட்டார் – நாஷ் லேக்கர்ஸுக்குப் போனது நல்லதே. ராப்டர்ஸை தொடர்ந்து கவனித்து வராததால் இந்த அரசியல் தெரியாமல் போயிற்று.

    ஒரு பக்காவான derivative ஆசாமி என்று என் பார்வையில் தோன்றும் டாக் ரிவர்ஸுக்குக் கொடுக்கப்படும் ’மேதாவி’ என்ற மரியாதையை எந்த விதத்திலும் புரிந்துகொள்ள முடிவதில்லை. சமீபத்திய நினைவுப்படி, 2010-11 சீஸனில் புதிதாக வந்த Nenad Kristicன் உருப்படியான ஆட்டத்தை மேலெடுக்காமல் பாஸ்டன் ‘game plan’ க்குள் திணிக்க முயன்று குழப்பி க்றிஸ்டிச்சின் ஆட்டத்தை ஒழித்தது ஒரு எளிய உதாரணம்! Always wrong, but never in doubt ரகம் இது – ஜெயமோகன் தான் நினைவுக்கு வருகிறார் ;-)

Powered by WordPress