கரிசல்

Blog best viewed in Firefox/Chrome

November 30, 2009

எலியாயிருத்தல்

எலியாயிருத்தல்
-அலெக்ஸாந்தர் வாத்

எலியாயிருத்தல். வயல் எலியாய். எனிலோர் தோட்ட
எலியாய்-
வீட்டில் வாழும் வகையா யல்ல.
பயங்கர வீச்சத்தை வெளியேற்றுகிறான் மனிதன்!
எங்கள் அனைவருக்கும் தெரியுமது – பறவைகள், நண்டுகள், எலிகள்.
அவன் கிளர்த்துவது குமட்டல் மற்றும் பயம்.
நடுக்கம்.

பனைமரப் பட்டையில் விஸ்தீரியாப் பூக்களை உண்ண,
குளிர்ந்த, ஈர மண்ணில் கிழங்கு தோண்ட
புத்தம்புது இரவடுத்து நடனமாட. பௌர்ணமி காண,
கண்களில் பிரதிபலிக்க
நளினச்
சந்திரவதையொளியை

வளை குடைய
தன்
நகக்கூர்நுனி யடியில்
என் சிறு இதயத்தைக்
கசக்க
குரூர வடக்குக் குளிர்காற்று
தன் எலும்பு விரல்களால் எனைத்
தேடுங் காலம்
ஒரு கோழை எலி இதயம்-
துடிக்குமோர் ஸ்படிகம்

__________________________________________________________________
தமிழில்: சன்னாசி
__________________________________________________________________

To be a mouse
-Aleksander Wat

To be a mouse. Preferably a field mouse. Or a garden
mouse-
but not the kind that lives in houses.
Man exhales an abominable smell!
We all know it – birds, crabs, rats.
He provokes disgust and fear.
Trembling.

To feed on wisteria flowers, on the bark of palm trees,
to dig up roots in cold, humid soil
and to dance after a fresh night. To look at the full moon,
to reflect in one’s eyes the sleek light of lunar
Agony.

To burrow in a mouse hole for the time when wicked
Boreas
will search for me with his cold, bony fingers
in order to squeeze my little heart under the blade of his
claw
a cowardly mouse heart –
A palpitating crystal.

Comments are closed.

Powered by WordPress