கரிசல்

Blog best viewed in Firefox/Chrome

June 12, 2005

புத்தக ஓடை

தங்கமணியின் அழைப்புக்கு நன்றி, அவரது நெகிழ்ச்சியான பதிவுக்குக்கும் ஒரு நன்றி. ஏன் படிக்க ஆரம்பித்தேன் என்று சொல்வதற்குப் பெரிதாக ஏதும் காரணங்கள் சொல்லத் தோன்றாததால், வெவ்வேறு காலகட்டங்களில் படித்துப் பிடித்த புத்தகங்களின் பட்டியலைமட்டும் இடுகிறேன். படிப்பதில் உள்ள ஆர்வம் சேகரிப்பில் இல்லை என்பதால், திரும்பத் திரும்பப் படிக்கும் சில புத்தகங்களைத்தவிர வாங்குபவற்றை, கிடைப்பதை இடம்பெயரும்போது அங்கங்கே விட்டுச்சென்றுவிடுவதாகவே இருந்திருக்கிறது இதுவரை. எங்கே சென்றாலும் எடுத்துச் செல்லும் புத்தகங்கள் ஒரு 15 – 20 இருக்கும். அவ்வளவுதானென்று நினைக்கிறேன். ஓவியப்புத்தகங்கள் மட்டும் வாங்குவதுண்டு – அவை மட்டும் பத்திரமாக இருக்கும்!!

உரைநடைப் புனைவுகளில் தமிழில் & பிற இந்திய மொழிகளில் பிடித்த சில:

நித்யகன்னி – எம். வி. வெங்கட்ராம்
அம்மா வந்தாள் – தி. ஜானகிராமன்
இடைவெளி – எஸ். சம்பத்
நவீனன் டைரி – நகுலன்
வாஸவேச்வரம் – கிருத்திகா
தாவரங்களின் உரையாடல் – எஸ். ராமகிருஷ்ணன் (நெடுங்குருதி – இன்னும் படிக்கவில்லை)
உள்ளேயிருந்து சில குரல்கள் – கோபிகிருஷ்ணன்
சதுரங்கக் குதிரை – நாஞ்சில் நாடன்
பொம்மைகள் உடைபடும் நகரம்/பாழி/பிதிரா – கோணங்கி
திசைகளின் நடுவே/விஷ்ணுபுரம் – ஜெயமோகன் (காடு, ஏழாவது உலகம் – இன்னும் படிக்கவில்லை)
மௌனி சிறுகதைகள்
கோபல்ல கிராமம்/கோபல்லபுரத்து மக்கள் – கி. ராஜநாராயணன்
வெக்கை – பூமணி
மய்யழிக் கரையோரம் – முகுந்தன்
அக்னி நதி – குர்ரத்துலைன் ஐதர்
அழிந்த பிறகு – சிவராம் காரந்த்
காட்டின் உரிமை – மகாஸ்வேதா தேவி
பாத்தும்மாவுடெ ஆடு/பால்யகால சகி – வைக்கம் முகம்மது பஷீர்

பிற மொழிகளில் பிடித்த சில:

Labyrinths/Aleph and Other stories/Ficciones – Jorge Luis Borges
The Castle – Franz Kafka
Complete works of Edgar Allan Poe
Perfume – Patrick Suskind
Silk – Alessandro Barricco
Foucault’s Pendulum – Umberto Eco
The Death of Artemio Cruz – Carlos Fuentes
If on a winter’s night, a traveler – Italo Calvino
Thus Spake Zarathustra/Beyond Good and Evil – Friedrich Nietzsche
One hundred years of solitude – Gabriel Garcia Marquez
Nausea – Jean Paul Sartre
120 days in Sodom – Marquise de Sade
The Stranger/The Fall – Albert Camus
Straight is the gate – Andre Gide
Life: A user’s manual – Georges Perec
Periodic Table/The Monkey’s wrench – Primo Levi
THe World as Will and Idea – Arthur Schopenhauer
Dictionary of Khazars – Milorad Pavic
Book of Laughter and Forgetting – Milan Kundera
Barabbas – Par Lagerkvist
Naked Lunch – William Burroughs
Zen and the art of motorcycle maintenance – Robert M. Pirsig
Moor’s Last Sigh – Salman Rushdie
The Drunken Boat – Arthur Rimbaud
Dracula – Bram Stoker
Time Machine – HG Wells
Zazie in Metro – Raymond Queneau
Alice in Wonderland/Through the looking glass – Lewis Carroll
Lolita/Despair – Vladimir Nabokov
Frida Kahlo (Biography) – Hayden Herrera
Waiting for the barbarians – JM Coetzee
Crime and Punishment/White Nights – Fyodor Dostoevsky
A Hero of our time – Lermontov
Portrait of the artist as a young man/Ulysses – James Joyce
What is living and what is dead in Indian philosophy – Debiprasad Chattopadhyaya
On the Road – Jack Kerouac
Roots – Alex Haley
The Journals of Anais Nin
Siddhartha – Herman Hesse
Hopscotch – Julio Cortazar

தொடர்ந்து படிக்க முடியாததால், யார் யார் அழைக்கப்பட்டிருக்கிறார்கள், யார் அழைக்கப்படவில்லை என்று முழுதாகத் தெரியாததால், கீழ்க்கண்ட ஐந்து பேரை அழைக்கிறேன் – ஏற்கனவே அழைப்பு விடப்பட்டிருந்தாலோ, எழுதி முடித்திருந்தாலோ, மன்னிக்க (வேண்டுமென்றால் இன்னொரு முறை எழுதவும்: :-) )

வெங்கட்
பத்ரி
அக்பர் பாட்சா
ஈழநாதன்
நாராயணன்

17 Responses to “புத்தக ஓடை”

 1. Narain says:

  மாண்டீ, அழைப்புக்கு நன்றி. ஆனாலும், புத்தகங்கள் பற்றி எழுதப் போவதில்லை என்பதை தங்கமணியின் பதிவிலேயே சொல்லிவிட்டேன்.Moore’s Last Sigh பற்றி ஒரு தொகுப்புரை நீங்கள் எழுதினால் நன்றாக இருக்கும்.

 2. prakash says:

  வாசவேஸ்வரம் பற்றி எழுதணும் என்று கேட்டுக் கொள்கிறேன். இது ஒரு soft porno இரகத்தைச் சார்ந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நிசமா? இதைத்தவிரவும் கிருத்திகா எழுதிய நாவல் ஒன்று உண்டு. அது என்ன தெரியுமா?

 3. ravisrinivas says:

  வாசேஸ்வரத்தினை முதலில் வெளியிட்டது வாசகர் வட்டம், பின்னர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் (அவுட்லுக், சன் டி.வியில் பணிபுரிந்த பத்திரிகையாளர்) வெளியிட்டார்.(தகவல் பிழை இருக்கலாம், ஆனால் பன்னீர்செல்வம் கிருத்திகாவின் ஒரு நாவலை, பல வருடங்கள் இரண்டாம் பதிப்பு காணாதது, வெளியிட்டார் என்பது எனக்குத் தெரியும்).வாசேஸ்வரம் படிக்க வேண்டிய நாவல்.
  இன்னொரு நாவல் நேற்றிருந்தோம் என்று நினைக்கிறேன். மதுரம் பூதலிங்கம், அதுதான் அவரது இயற் பெயர் என்ற பெயரில் அவர் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். அதில் இன்று ஆதிசங்கரர் உயிருடனிருந்தால் என்ற தலைப்பில் எழுதியிருக்கும் நூல் சுவாரசியமானது. மாவட்ட அல்லது கிளை நூலகங்களில் தேடினால் இவை கிடைக்கலாம்.பாரதிய வித்யா பவன் அவருடைய நூல்களை வெளியிட்டிருக்கிறது. எனவே அதில் தொடர்புடையவர்களிடம் இந்நூல் இருக்க வாய்ப்பிருக்கிறது.
  அவரது மகள் மீனா சுவாமிநாதன், எம்.எஸ்.சுவாமிநாதனின் மனைவி. சுவாமிநாதன் யார் என்று கேட்பவர்கள் இந்துவை தினசரி மும்முறை படிக்க வேண்டும் என்று சாபம் இடுகிறேன் :)

 4. prakash says:

  thanks for the info ravi

 5. நாராயணன்: ருஷ்டீயின் அந்த புத்தகம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று – முயற்சிக்கிறேன்.

  பிரகாஷ், வாஸவேச்வரம் soft-porno என்று சொல்லிவிடமுடியாதென்று நினைக்கிறேன். எவரும் சிபாரிசு செய்யாமல் தற்போக்கில் படித்துப் பிடித்துப்போன புத்தகம் அது. மேலும், ஒருவகையில் பார்த்தால், God of small thingsக்கும் அதற்கும் சில ஒற்றுமைகள்கூட உண்டு. மற்றப்படி, இந்தப் பட்டியலில் நான் குறிப்பிடாத அலென் ராபெ க்ரியே (Alain Robbe Grillet) போன்ற எழுத்தாளர்கள், நேரடியாக போர்னொ புகைப்படத் தொகுப்புக்களுக்கு ‘text’ எழுதியிருக்கிறார்கள். கிருத்திகாவின் பிற படைப்புக்களை நான் படித்ததில்லை.

  ரவி, தெளிவுபடுத்தியதற்கு நன்றி – நான் படித்தது பலகாலம் முன்பு எங்கள் ஊர்க் கிளை நூலகத்தில் கிடைத்த ஒரு பிரதி. நீங்கள் கூறிய தகவல்கள் பல நான் அறியாதவை.

 6. அப்பாடா,
  கடைசியில் வட்டத்தை விட்டு அகலும் தொடுகோட்டுப் பட்டியல். நிறையபேருக்கு தி.ஜா.வின் மோகமுள் பிடித்திருந்தது ஆச்சரியமளிக்கவில்லை. ஆனால் ‘அம்மா வந்தாள்’ பற்றி குறிப்பிடாதது ஆச்சரியமாகவே இருந்தது. அதேபோல விடுபட்ட பல முக்கிய படைப்புகள், படைப்பாளிகள் உங்கள் பட்டியலில். நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’ இல்லையே. படிக்கவில்லையா பிடிக்கவில்லையா? கன்னடத்தில் சம்ஸ்காராவைத் தாண்டி சிவராம் காரந்தின் ‘அழிந்த பிறகு’ குறிப்பிட்டதற்கு நன்றி. சித்தலிங்கையாவின் மொழிபெயர்ப்பில் National Book Trust பதிப்பாக வந்த இந்த நாவலை மூலத்தில் படித்தால் எப்படி இருக்கும் என்று ஒரு முறை நஞ்சுண்டனிடம் பேச்சு வாக்கில் கூறியபோது ‘இப்படி ஒரு நாவலை எழுத முடிந்தால், அடுத்த நாளே பூரண வாழ்க்கை வாழந்த திருப்தியோடு இறக்கவும் தயார்’ என்று குறிப்பிட்டார்.

 7. //நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’ இல்லையே. படிக்கவில்லையா பிடிக்கவில்லையா?//
  படித்திருக்கிறேன் – ஏனோ இங்கே குறிப்பிடத் தோன்றவில்லை! சுந்தர ராமசாமியின் அத்தனை புனைவுகளையும் படித்திருந்தாலும் – ஏனோ அதேதான். நல்ல கதைகளுக்கும் பிடித்த கதைகளுக்கும் உள்ள வேறுபாடு போல! மேலும், இது என்னளவில்கூட ஒரு முழுமையான பட்டியலாகவும் இருக்கச் சாத்தியம் இல்லை அல்லவா?

 8. BALA says:

  mAnti,
  Thanks for Your BOOK list :)
  I was the first to invite you :(
  http://balaji_ammu.blogspot.com/2005/06/book-meme.html

  Also, Did you see ????
  http://balaji_ammu.blogspot.com/2005/06/blog-post_10.html

 9. Thangamani says:

  நன்றிகள் மாண்ட்டீ!

  புத்தகப் பட்டியலுக்கும் நன்றிகள்.

 10. நன்றி பாலா. நீங்களும் சந்தோஷ் குருவும் குறிப்பிட்டிருப்பதை எழுதியபின் தான் பார்த்தேன்.

 11. மாண்டி,

  அழைப்புக்கு நன்றி. வேலைப்பளுவின் காரணமாக உடனே எழுத முடியவில்லை. எழுதியவுடன்கூட உடனே இங்கே சொல்ல முடியவில்லை. பார்க்க;

  http://www.domesticatedonion.net/blog/?item=521

  வாசவேஸ்வரமும் நவீனன் டைரியும் இன்னும் படிக்கக் கிடைக்கவில்லை. ஜப்பானில் வசித்த இருண்ட காலத்தில் (தமிழ்ப்புத்தகங்களைப் பொருத்தவரை) விட்டுப் போன புத்தகங்கள் நிறைய இருக்கின்றன. எஸ்.ராவையும் கோணங்கியையும் இன்னும் முறையாக வாசிக்கவில்லை. உங்கள் பட்டியல் சுவாரசியமானது. நன்றி!

 12. எழுத்தாளர் திலீப் குமார் பற்றி இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது, வசவேஸ்வரம் பற்றிய இந்த குறிப்பு கிடைத்தது. பிரகாஷ், உங்களுக்கும் உபயோகப்படலாம்.

 13. karupy says:

  மாண்டீ.. தாங்கள் ஆங்கிலத்தில்தான் அதிகம் வாசிப்பவர் என்பது தெரிகிறது. நாடகப்பிரதிகள் வாசித்ததுண்டா? அப்படி ஏதாவது (பெண்ணியம் சம்மந்தமாக தங்கள் கண்களில் தட்டுப்பட்டால்) எனக்குத் தெரியப்படுத்துங்கள். நல்ல காத்திரமான பிரதிகளைத் தேடிக்கொண்டிருக்கின்றேன். தழுவலாகவோ மொழிபெயர்த்தோ வரும் காலங்களில் மேடை ஏற்ற விருப்பமாக உள்ளது.

 14. Anonymous says:

  Very good webpage you have here, and best greetings to all your visitors

Powered by WordPress